1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2023 (12:19 IST)

தளபதி 68’ படத்தில் யார் யார் நடிக்கின்றனர்? பூஜை வீடியோவுடன் முழு விவரங்கள்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பூஜை வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் விஜய் பூஜையில் கலந்து கொண்ட காட்சிகள் உள்ளன. மேலும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, விடிவி கணேஷ்,  வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் மணி ஒளிப்பதிவு, வெங்கட்ராஜ் எடிட்டிங் மற்றும் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva