மருதமலை முருகன் கருவரைக்குள் எல் முருகன் வேல் வைக்க அனுமதி மறுப்பு!

BJP Murugan
மருதமலை முருகன் கருவரைக்குள் எல் முருகன் வேல் வைக்க அனுமதி மறுப்பு!
siva| Last Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (20:30 IST)
தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அவர்கள் கடந்த 6ஆம் தேதி முதல் வேலையா துறையை நடத்தி வருகிறார் என்பதும் இந்த வேலை யாத்திரை அடுத்த மாதம் வரை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வேறு யாத்திரையை நடத்திவரும் முருகன் அவ்வப்போது கைது செய்யப்பட்ட வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் வேல் யாத்திரை மூலம் பாஜக தலைவர் எல்.முருகன் கையில் எடுத்து வந்த வேலை, மருதமலை முருகன் கருவறைக்குள் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறி பாஜக தலைவர் முருகனின் வேலை, கடவுள் முருகன் அருகே கொண்டுச்செல்ல முடியாது என கோயில் நிர்வாகம் தெரிவித்ததால் கோவில் நிர்வாகிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘வேல் யாத்திரையின் மூலம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது.. இந்த வேல் யாத்திரை அவசியம் அல்ல, அத்தியாவசியம் என தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :