வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:23 IST)

மீண்டும் புளூடிக்: டுவிட்டருக்கு நன்றி கூறிய குஷ்பு!

உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரில் பிரபலங்கள் புளூடிக் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புளூடிக் இருப்பதால் பிரபலங்களின் போலி கணக்குகளை அடையாளம் கண்டு கொள்ள வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்தே கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களும் டுவிட்டரில் புளூடிக் பெற்று விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கில் இருந்து புளூடிக் நீக்கப்பட்டது
 
இதற்கு என்ன காரணம் என்று ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளிக்காத நிலையில் குஷ்பு அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் குஷ்புவின் டுவிட்டர் பக்கத்திற்கு மீண்டும் புளூடிக் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தனது டுவிட்டர் கணக்கிற்கு மீண்டும் புளூடிக் கொடுத்த டுவிட்டர் நிர்வாகத்திற்கு தனது நன்றி என்று குஷ்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்