வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (10:34 IST)

நாளை 1100 இடங்களிலும் பாஜக ஆர்ப்பாட்டம் – ஏன்?

நாளை பால் விலை உயர்வை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.


ஆவினின் ப்ரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்தது. இதனால் ஆவின் ஆரஞ்சு நிற ப்ரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பால் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 15 ஆம் தேதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று முன்னதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை  அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. நாளை 1100 இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited By: Sugapriya Prakash