வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (20:12 IST)

உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லையா? வதந்திகளுக்குப் பதில் சொன்ன திமுக பிரமுகர்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. கூட்டணி முடிவுகளுக்கு முன்னதாகவே தேர்தல் பரப்புரையில் பிஸியாகிவிட்ட திமுக தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் – திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு அளித்திருந்தார். 

ஏற்கனவே திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது என்ற விமர்சனங்களுக்கு இது மேலும் தூபம் போட்டது போல ஆனது. இந்நிலையில் தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் நெருக்கமானவர்களிடம் கூறியதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என்று திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு சீட் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு ‘அது தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு ‘ எனக் கூறியுள்ளார்.