வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:00 IST)

தன் வீட்டில் தானே மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய இந்து முன்னணி பிரமுகர்!

கும்பகோணத்தில் இந்து முன்னணி பிரமுகர் ஒருவரது வீட்டின் முன் மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்ட நிலையில் அதை வீசியது அவரேதான் என தெரிய வந்துள்ளது.

கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்கரபாணி என்பவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஏழு ஆண்டு காலமாக இந்து முண்ணனி கட்சியின் மாநகர செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று காலை இவரது வீட்டின் முன் மண்ணெண்ணெய் பாட்டில் ஒன்று வீசப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீஸ் சென்று சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர்.


விசாரணையில் அவருக்கு எதிரிகள், விரோதம் ஏதுமில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் சக்கரபாணியின் பதில்களும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியதால் அவரை அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் விளம்பரத்திற்காக தானே மண்ணெண்ணெய் பாட்டிலை தன் வீட்டு முன்பு வீசியதாகவும், போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்பதாலும், விளம்பரம் கிடைக்கும் என்பதாலும் இதை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edit By Prasanth.K