திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (23:02 IST)

சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசியவர் கைது!

thanjavur
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வசிக்கும் சக்கரபாணி என்பவர் தன் சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி என்ற பகுதியில் வசிப்பவர் சக்கரபாணி(38). இவர் இந்து முன்னணியில்  மாநகரச் செயலாளராக உள்ளார்.

இவர் வீட்டின் முன் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போலீஸிக்கு காலையில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சக்கரபாணியிடமே 2 மணி  நேரம் விசாரணை நடத்தினர்.

அதில், தன் பெயர் கும்பகோணத்தில் பரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டார். எனவே அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj