திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (18:03 IST)

குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

velayutha swami koyil
மேட்டுப்பாளையம் குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்-  காரமடை அருகே குருந்தமலையில்,  இந்து சமய அறநிலைய நிலையத்துறைக்கு உட்பட்ட மிகவும் பழமையான குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றன. 29 ஆம் தேதி, மங்கள இசை, கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

விழாவில் இன்று ஆறு கால  யாக  பூஜைகள் நடைபெறவுள்ளன. :30 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று,  ராஜகோபுரம், மூலவர் பரிவார் தெய்வங்களுக்கு புனித நீரூற்றி காலை 7:45 க்கு  மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.8:45 க்கு நிறைவடைந்தது.