சூரிய உதயம் பார்க்க வந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பிய போலீஸார்: குமரியில் பரபரப்பு

Kanyakumari
சூரிய உதயம் பார்க்க வந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பிய போலீஸார்
siva| Last Updated: செவ்வாய், 6 ஜூலை 2021 (07:59 IST)
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலவற்றிற்கு தடைகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன உள்ளன என்பதும் பெரும்பாலான சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கன்னியாகுமரிக்கு இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்க்க வந்தனர்

ஆனால் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு இன்னும் தடை இருக்கும் காரணத்தை காட்டி இன்று காலை சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர் இதனால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது
தனிமனித இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இதில் மேலும் படிக்கவும் :