செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (18:39 IST)

அமைச்சர் துரைமுருகனை சந்தித்த கன்னியாகுமரி எம்பி: என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகனை சந்தித்த கன்னியாகுமரி எம்பி: என்ன காரணம்?
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது கன்னியாகுமரி எம்பி தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டார். அவர் பழம்பெரும் அரசியல்வாதி பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வெற்றி பெற்ற நாளிலிருந்து அவர்கள் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளை அறிந்து, குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து விஜய் வசந்த் எம்பி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அத்துடன் குமரி மாவட்டத்திற்கு தேவையான துறை ரீதியான கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன் வைத்தேன்.