தமிழகத்தில் கூலிப்படை - பாஜக தலைவர் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் கூலிப்படை - பாஜக தலைவர் அதிர்ச்சி தகவல்
கூலிப்படைகளை கூண்டோடு ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கோடம்பாக்கத்தில், வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் கொல்லப்பட்டுள்ளார். மக்களுக்காக போராடுபவருக்கே இந்த கதியா என்ற அச்சம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அளவிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.
சென்னையில், தினமும் ஒன்று அல்லது இரண்டு கொலைகள் நடைபெறும் என்று எழுதப்படாத விதியாக உள்ளது. தமிழகத்தில் இது போன்ற போக்கு அதிகரித்து வருகிறது வருத்தம் அளிக்கிறது.
சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். எனவே, கூலிப்படைகளை கூண்டோடு அழிக்க தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.