1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kudiyatham DMK MLA Kathavarayan passes away

இன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏ மரணம்: அதிர்ச்சியின் உச்சத்தில் திமுக

குடியாத்தம்
இன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏ மரணம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானதாக சற்று முன்னர் வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் காத்தவராயன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்று 9 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தவர் எம்எல்ஏ காத்தவராயன் என்பதும் தனது தொகுதி மக்களுக்காக அயராது உழைப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே நேற்று திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று காலமான நிலையில் இன்று மற்றொரு திமுக எம்எல்ஏ ஒருவர் காலமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே வாரத்தில் இரண்டு திமுக எம்.எல்.ஏக்கள் காலமாகியுள்ளதால் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுக தொண்டர்கள் பல அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதாவை கண்டால் மு.க.ஸ்டாலின் நடுங்குவார்! – செல்லூர் ராஜு!