ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (11:45 IST)

‘பி ஃபார்ம்’ கையெழுத்து அதிகாரம் யாருக்கு?: எடப்பாடிக்கு செக் வைக்க பன்னீருக்கு ஐடியா கொடுத்த முனுசாமி!

‘பி ஃபார்ம்’ கையெழுத்து அதிகாரம் யாருக்கு?: எடப்பாடிக்கு செக் வைக்க பன்னீருக்கு ஐடியா கொடுத்த முனுசாமி!

ஓபிஎஸ் அணியினர் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளை எடப்பாடி அணியினர் நிறைவேற்றியதை அடுத்து அதிமுகவின் இரு அணிகளும் நேற்று இணையும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.


 
 
இதனையடுத்து எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அணிகள் இணைப்பு குறித்து பேசினர். அதன் பின்னர் ஓபிஎஸ் தனது அணியினருடனும், அமைச்சர்கள் முதல்வர் பழனிச்சாமியுடனும் ஆலோசனை நடத்தினர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
 
கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது ஆதரவு முக்கிய தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செம்மலை, மாஃபா பண்டியராஜன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட 25 பேர் பங்கேற்றனர்.
 
இதில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் அணிகள் இணைப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறார் ஓபிஎஸ். அப்போது கே.பி.முனுசாமி எடப்பாடி அணிக்கு செக் வைக்கும் விதமாக பேசியுள்ளார்.
 
எடப்பாடி அணியினர் அறிவித்ததை நம்ப முடியவில்லை. நாம கேட்டது சிபிஐ விசாரணை ஆனா அவர்கள் நீதிபதி யாருன்னே சொல்லாமல் ஆணையம் அறிவிக்கிறாங்க. எடப்பாடி பழனிச்சாமி சமீப காலமாக தன்னை ஜெயலலிதாவுக்கு இணையாக காட்டிக்கொள்கிறார்.
 
ஜெயலலிதா இருக்கும் போதே நீங்க முதலமைச்சராக இருந்திருக்கீங்க ஆனால் எடப்பாடி தன்னையே ஜெயலலிதாவாக நினச்சு சில விஷயங்களை பண்ணிட்டு இருக்காரு. நாளைக்கு கட்சி நம்மக்கிட்ட இருக்கணும்னா தேர்தல்ல ‘பி பார்ம்’ல கையெழுத்து போடற அதிகாரம் உங்களுக்கு இருக்கணும். அதை உறுதிப்படுத்திட்டு இணையலாம் என கே.பி.முனுசாமி கூறியதை கவனமாக கேட்டுள்ளார் ஓபிஎஸ்.