ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (09:30 IST)

கோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்

சென்னையின் பெருமைக்குரிய அம்சங்களில் ஒன்றான மெட்ரோ ரயில், உள்ளூர் பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக அலுவலகம், கல்லூரிகளுக்கு செல்பவர்கள் இந்த மெட்ரோ ரயிலை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கோயம்பேடு முதல் சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில்சேவை திடீரென முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பீக் அவர் என்று கூறப்படும் நேரத்தில் மெட்ரோ ரயிலை நிறுத்தியுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

மின்கோளாறு காரணமாக ஒருவழிப்பாதையில் மட்டும் சிலமணி நேரம் மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு பாதையிலும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மின்கோளாறை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் சில மணி நேரங்களில் இந்த பாதையில் ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

மேலும் கோயம்பேடு மார்க்கெட் முதல் சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.