கோயம்பேடு சில்லரை காய்கறி அங்காடிகள் நாளை மூடப்படும்: அதிகாரி உறுதி
ஏற்கனவே அறிவித்தபடி நாளை கோயம்பேடு சில்லறை காய்கறி அங்காடிகள் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா தொற்று பரவலை அடுத்து நேற்று தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒன்று கோயம்பேட்டில் மொத்த காய்கறி விற்பனை மட்டுமே அனுமதி என்றும் சில்லறை காய்கறி விற்பனைக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது
இதனால் கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும், இதனை அடுத்து இன்று அவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இது குறித்து கூறிய போது திட்டமிட்டபடி நாளை கோயம்பேடு சில்லரை விற்பனை காய்கறி அங்காடிகள் மூடப்படும் என்றும் கடந்த முறை கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டது போல் நடைபெறாமல் தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில்லரை காய்கறி கடைகள் அடைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சில்லரை கடை காய்கறி வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்