1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (12:07 IST)

மீனவர் வலையில் காவி நிற தாமரை நண்டு! – வேதாரண்யத்தில் ஆச்சர்யம்!

வேதாரண்யம் மீனவர்கள் வலையில் காவி நிறத்தில் தாமரை வடிவம் கொண்ட நண்டு சிக்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். சமீபத்தில் அவ்வாறாக பிடித்த மீன், நண்டு மற்றும் இறால்களை பிரித்துக் கொண்டிருந்தபோது காவி நிறத்தில் புதிய நண்டுகள் சில சிக்கியுள்ளன.

இந்த நண்டின் முன்புறம் முழுவதும் காவி நிறத்திலும், அடிப்பாகம் பாஜக சின்னமான தாமரை பூ போலவும் காட்சியளிப்பது மீனவர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் பலவிதமான நண்டுகள் சிக்கும் நிலையில் காவி நிற வித்தியாசமான நண்டு சிக்குவது இதுவே முதல்முறை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.