வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூன் 2024 (11:36 IST)

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

Stalin
கோடநாடு கொலை வழக்கு குறித்து இன்டர்போல் மூலம் விசாரணை செய்து வருகிறோம் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். 
 
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோடநாடு கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோடநாடு கொலை வழக்கில் இதுவரை 266 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் 8 செல்போன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் வெளிநாட்டு அழைப்புகள் இருப்பதால் இன்டர்போல்  மூலம் விசாரணை செய்து வருகிறோம் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.
 
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்  2017 ஏப்ரல் 24-ஆம்தேதி காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சில முக்கியப்பொருட்கள் கொள்ளை போனதாக கூறப்பட்ட நிலையில் இக்கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் எடப்பாடியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
 
மேலும் அடுத்து, காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் காரில் தப்பி செல்லும்போது விபத்திற்குள்ளாகி  உயிரிழந்தனர். இந்த வழக்கு குறித்து தான் இன்று சட்டமன்றத்தில் முதல்வர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran