1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (11:26 IST)

டீ போட்டு தராத மருமகள்.. கடுப்பான மாமியார் செய்த கொடூர கொலை!

crime
மருமகள் டீ போட்டு தராதததால் மாமியார் ஆத்திரத்தில் மருமகளை கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அத்தாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பர்சானா. இவர் இவரது மகன், மருமகளுடன் வசித்து வந்துள்ளார். பர்சானாவுக்கும் அவரது மருமகள் அஜ்மிரி பேகத்திற்கு கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை பர்சானா தனது மருமகள் அஜ்மிரி பேகத்திடம் டீ போட்டு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அஜ்மிரி பேகம் வேறு வேலைகளில் இருந்ததால் டீ போடத் தாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் பர்சானா மருமகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இருவரும் சண்டை போட்ட நிலையில் அஜிமிரி பேகம் டீ போட்டுத் தராமல் கிச்சனுக்கு சென்று சமையல் செய்துக் கொண்டிருந்துள்ளார்.


மருமகளுடனான சண்டையினால் ஆத்திரமடைந்த பர்சானா ஒரு துப்பட்டாவை எடுத்துச் சென்று அஜ்மிரி பேகத்தின் பின்னாலிருந்து கழுத்தில் துப்பட்டாவை போட்டு கழுத்தை நெறித்து மருமகளை கொடூரமாக கொன்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பர்சானாவை கைது செய்துள்ளதோடு, மருமகள் அஜ்மிரி பேகம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு டீக்காக மருமகளை மாமியார் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K