என்னைய நீக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்ல! – கம்பேக் குடுக்கும் கு.க.செல்வம்!
திமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் கு.க.செல்வம்
கடந்த மாதம் கட்சி அனுமதியின்றி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததாய் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் எந்த கட்சியிலும் இணைய போவதில்லை என கூறியிருந்தார்.
தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நியாயமான விசாரணை தேவை என வழக்கு தொடர்ந்துள்ளார் கு.க.செல்வம். அதில் “தன்னை கட்சியிலிருந்து நீக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. கட்சி பொருளாளர் மட்டுமே உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
அன்பழகன் மறைவிற்கு பிறகு கட்சி பொதுசெயலாளர் பதவி காலியாக இருந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில்தான் துரைமுருகன் பொதுசெயலாளர் பதவியை ஏற்றார். அதை தொடர்ந்து குக செல்வம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க திமுக தலைவர் மற்றும் பொது செயலாளருக்கு நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.