புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (18:38 IST)

’நகைச்சுவை மன்னர் ‘ நடிகர் நாகேஷின் பிறந்ததினம் இன்று !

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நாகேஷ். கடந்த 1933 ஆம் ஆண்டு தாராபுரத்தில் உள்ள மொழிஞ்சிவாடியில் தான்  பிறந்து வளர்ந்தார். ஆரம்ப காலத்தில்  இந்திய ரயில்வே துறையில் வேலை செய்து வந்த நாகேஷ், நாடகத்துறையில் மீது உள்ள ஆர்வத்தால் நடிகரானார்.
அப்போது, பிரபல காமெடியனாக இருந்த சந்திரபாபுக்குப்  போட்டியாகவும் அதேசமயம், தனது தனித்தன்மையுடன் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவரது திறமைக்கேற்ப பிரபல பட அதிபர்கள் முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்.ஜி. ஆர் படங்களில் காமெடியனாக்கினர்.
 
இதனைத்தொடந்து நாகேஷ், தனது தனித்த உடல்மொழி,பேச்சு பாணி, நகைச்சுவை, இயல்பான நடிப்பு என மக்கள் மத்தியில் பிரபலமானார். நீர்க்குமிழி , சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இன்றுள்ள சினிமா நடிகர்களுக்கு நடிகர் சிவாஜி ஒரு முன்மாதிரி போன்று நடிகர் நகேஷும் சிறந்த முன்மாதிரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் 600 க்கு மேற்பட்ட  படங்களில் நடித்திருந்த நடிகர் நாகேஷ், கடந்த 2009 ஆம் ஆண்டு காலமானார்.