செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (16:14 IST)

விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசிய பொன். ராதாகிருஷ்ணன்!

நேற்று, நடைபெற்ற பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு எனது ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சமூக பிரச்சனைகளுக்காக ஹேஸ்டேக் போடவேண்டும். சமூக பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன், சுபஸ்ரீ விவகாரத்தில் யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களைக் கைது செய்யாமல், பேனர் பிரிண்ட் செய்தவர்களைக் கைது செய்துள்ளதாகப் பேசினார்.
இதுகுறித்து அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துவருகின்றனர். அதேசமயம் விஜய்யின் இந்தக் கருத்துக்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
 
இந்நிலையில்,  செய்தியாளர்கள், இன்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம், விஜய்யின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர்.
 
அப்போது அவர்  கூறியதாவது :
நடிகர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை. அவர்களும் நாட்டின் குடிமக்கள் தான். அதனால் நடிகர் விஜய் பேசியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.