திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (16:12 IST)

எச்.ராஜாவை வெளிப்படையாக திட்டிய குஷ்பு

தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றப்படும் என்று கூறிய எச்.ராஜாவை காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு வெளிப்படையாக திட்டி டுவீட் செய்துள்ளார்.

 
வடஇந்திய மாநிலமான திரிபுராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து திரிபுராவில் உள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது. இதுகுறித்து எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் பெரியார் சிலை என்று பதிவிட்டார்.
 
இவரது இந்த கருத்து தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா கருத்தும் பாஜகாவும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். எச்.ராஜா கருத்துக்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எச்.ராஜாவை வெளிப்படையாக திட்டி பதிவிட்டுள்ளார். அதில், ‘எச்சை ராஜா’ என்று குறிப்பிட்டுள்ளார். குஷ்பு வெளிப்படையாக திட்டி டுவீட் செய்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.