செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (21:00 IST)

கடலுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட கிலோ கணக்கில் தங்கம் ...கண்டுபிடித்த போலீஸார் !

கடலுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட கிலோ கணக்கில் தங்கம் ...கண்டுபிடித்த போலீஸார் !

ராமேஸ்வரம் மாவட்டத்தில்  கடத்தல் காரர்கள் கடலுக்குள் பதுக்கு வைத்திருந்த 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 17 கிலோ தங்கத்தை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்துள்ளனர். 
 
ராமேஸ்வரம் மாவட்டம்  பட்டினம் பகுதில் வசிக்கும் செய்யது என்பவரின் மகன் ஆஷிக்  மற்றும் அவரது தோழன் பாரூக் ஆகியோர், நேற்று மாலைவேளையின்போது முயல்தீவு அருகே கடலோர காவல்படையிடம் பிடிபட்டனர்.
 
அப்போது, காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை  நடத்தினர், தாங்கள் இலங்கையில் இருந்து தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தததையும், அதைப் பொட்டலமாக கட்டி முயல் தீவு அருகே கடலுக்குள் பதுக்கி வைத்துள்ளதையும் தெரிவித்துள்ளனர். 
 
பின்னர், நீச்சல் வீரர்கள் கடலுக்குள் குறிப்பிட்ட இடத்தில் குதித்து, தங்க பிஸ்கட்டுகளைக் கண்டுபிடித்துக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தனர். தற்போது,இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.