செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (12:51 IST)

கேரளாவிலும் தளபதி விஜய் குருதியகம்..! – கேரள ரசிகர்கள் ஏற்பாடு!

Vijay
நடிகர் விஜய் பெயரில் செயல்படும் மக்கள் இயக்கம் சார்பாக தற்போது கேரளாவிலும் ரத்த தான மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான முன்னணி நடிகராக உள்ளவர் விஜய். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் “விஜய் மக்கள் இயக்கம்” செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர். கடந்த சில மாதங்கள் முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்திற்கான அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல், சமூக வலைதள கணக்குகள் மற்றும் குருதியகம் தொடங்கப்பட்டது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கப்பட்ட தளபதி விஜய் குருதியகம் மூலமாக பலர் ரத்த தானம் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள கேரளாவிலும் தளபதி விஜய் குருதியகம் தொடங்கப்பட்டுள்ளது. ரத்த தானம் செய்யவும், அவசர சிகிச்சைகளுக்கு ரத்தம் பெறவும் இந்த குருதியகம் மக்களுக்கு உதவியாக இருக்கும் என விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.