திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (22:03 IST)

மாநில வேந்தரை நியமிக்கும் சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்! தமிழக அமைச்சர் வரவேற்பு

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கேரள ஆளுனர் ஆரிச் முகமது கானுக்கும், மாநில அரசிற்கும் இடையே மோதல் வலுத்து வருகிறார்.

இந்த நிலையில், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தத நிலையில்,  தமிழகத் தொழில் நுட்பத்துறை அமைச்சர்  மனோ தங்கராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில், மா நில மாநில பல்கலைகள் மாநில அரசுக்கு சொந்தமானவை. மாநிலத்திற்கு சொந்தமான பல்கலைக்கழக வேந்தரை நியமிக்கும் உரிமை அம்மாநில மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கே இருக்க வேண்டும். அவ்வாறு மாநில வேந்தரை நியமிக்கும்  சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj