டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள முன்னணி நிலவரங்களில், பாஜக 41 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் இருந்தால் போதுமான நிலையில், கூடுதலான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இக்கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், இன்னும் ஏழு தொகுதிகள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அதுவும் இல்லை. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1993ஆம் ஆண்டு டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக, 1998ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தது. அதன் பின், தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது.
Edited by Mahendran