செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (17:37 IST)

தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி

தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. 
 
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் 21 மருத்துவமனைகளில் சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
 
இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலரான லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் சென்னை மதுரை நெல்லை மற்றும் வேலூரில் சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.