வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 13 மே 2020 (17:30 IST)

மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் காட்டாற்று வெள்ளம்...

வங்கக்கடலில் அந்தமான் தீவு பகுதியருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை முதல் பல இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்றால் அதற்கு “ஆம்பன்” என பெயரிடப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பொருளாதாரரீதியாக மக்கள் இழப்பை சந்தித்துள்ள நிலையில் ஆம்பன் உருவாகிவிட கூடாது என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகளவும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த நிலையில்,இன்று சில இடங்களில் மழை பெய்தது.

வழக்கமாக தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் குற்றாலம் அருவியின் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும்.  இன்று   வழகத்துக்கு மாறாக தென்காசி மாவட்டம்  மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.