1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (16:34 IST)

ஹைதராபாத் என்கவுன்டர்: 5.30 - 6.15 மணி வரை நடந்தது என்ன? சஜ்ஜனார் விளக்கம்!

ஹைதராபாத்தில் நடந்த என்கவுன்டர் எவ்வாறு நடந்தது என சைபராபாத் காவல்துறை ஆணையர் சஜ்ஜனார் பேட்டியளித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சம்பந்தமாக நால்வரை கைது செய்தது போலீஸ் தரப்பு.  
 
கைது செய்யப்பட்டவர்களிம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் கண்டெக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தப்பிக்க முற்பட்டதால் சுட்டுக்கொள்ளப்பட்டனர். 
 
இந்நிலையில் சைபராபாத் காவல்துறை ஆணையர் சஜ்ஜனார் என்கவுண்டர் குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும், நீதிமன்ற அனுமதியோடு, 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தோம். 
 
விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நால்வரையும் அழைத்துச் சென்றோம், அப்போது நால்வரும், ஆளுக்கொரு இடத்தைக் கூறி, போக்கு காட்டியதாகவும், திடீரென அவர்கள் நான்குபேரும் போலீசார் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். 
 
பின்னர் நால்வரில், இரண்டு பேர், போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து, எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். வேறு வழியே இன்றி, தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், நால்வரும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். 
 
இந்த நிகழ்வுகள் அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கி, காலை 6.15 மணிக்குள், நடந்து முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.