1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 மே 2024 (06:32 IST)

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

தமிழர்களைப் பற்றியும் தமிழ்நாடு குறித்தும் அவதூறாக பேசிய பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமைச்சர் அமித்ஷா இருவரும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக பாஜக தலைமை அலுவலகம் முற்றுகையிடப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை கூறியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால் வரும் 10 பேருக்கு உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 
 
மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.  
 
எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும்,  முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த 10 பேருக்கு.. பங்கம் மேக்ஸ்.. என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva