செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (11:00 IST)

பாரதி இப்போது பாடினா கோர்ட்டு, கேஸுதான் - நடிகை கஸ்தூரி கிண்டல்

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தராஜான் போர்க்கொடி தூக்கினார்.


 

 
அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.  ஒருபுறம் நடிகர் கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் சிவாஜி நடித்த கை கொடுத்த தெய்வம் படத்தில் இடம்பெற்ற ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற பாடல் வீடியோவை வெளியிட்டு, பாரதியாரெல்லாம் இப்போ வந்து பாட்டு பாடினா கண்டிப்பா கோர்ட்டு, கேஸுதான்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
 
மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பராசக்தி படம் இப்போது வந்தால் என்னவாகும்? என ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.