1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மே 2022 (11:26 IST)

8ம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் தொல்லை! – சக மாணவர்கள் கைது!

abuse
சென்னை காசிமேட்டில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 13 வயதாகும் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அந்த பகுதியை சேர்ந்த அந்த சிறுமியுடன் படிக்கும் சக மாணவர்கள் 4 பேர் அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்து படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் அந்த 4 மாணவர்களும் சிறுமியின் வீட்டிற்கு வந்தபோது அங்கு யாரும் இல்லை.

இதை வாய்ப்பாக பயன்படுத்தி சிறுமியை கட்டிப்போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு முயன்றுள்ளனர். ஆனால் சிறுமி கூச்சலிட்டதால் அங்கிருந்து அவர்கள் ஓடியுள்ளனர். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் 4 மாணவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.