1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (12:08 IST)

கரூர் வாகன ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்த விவகாரம்: ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

கரூர் வாகன ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்த விவகாரம்: ஒருவர் நீதிமன்றத்தில் சரண்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கரூரைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் அவர்கள் திடீரென வேன் மோதி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த விபத்தில் உயிரிழந்த கனகராஜ் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் வேன் ஓட்டுனர் சுரேஷ் குமார் என்பவர் சற்றுமுன்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இதனை அடுத்து அவரை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுனர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது