கோயிலில் பெண்ணின் கண் முன்னே காதலனைக் கொன்ற உறவினர்கள் – கரூரில் ஆணவக்கொலை!

Last Updated: வியாழன், 7 ஜனவரி 2021 (10:48 IST)

கரூரில் கோயிலின் உள்ளே வைத்து இளைஞர் ஒருவரை கொலை செய்துள்ளனர் சாதி வெறியர்கள்.

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதற்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காதலர்கள் இருவரும் கரூரில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்று அங்கு பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பெண்ணின் முன்னாலேயே ஹரிஹரனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த ஹரிஹரனை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றீ ஹரிஹரன் உயிரிழந்துள்ளார்.

இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து பெண்ணின் உறவினர்கள் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :