சேவல் கட்டு போட்டியின்போது இளைஞர் பலி
கரூர் மாவட்டம் சின்ன முத்தனம் பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல்கட்டு போட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்தப் போட்டியின்போது, சேவலுக்கு பயிற்சி அளிக்கும் முருகேசன் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேவல் போட்டி நடத்திய 4 பேர்களை கைது செய்தனர்.
மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.