1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (08:36 IST)

கொரோனா தடுப்பூசிக்கு பயப்படும் 7 சதவீத மக்கள்! – ஆய்வில் தகவல்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 7 சதவீத மக்கள் அஞ்சுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. முதலில் மக்கள் தடுப்பூசிக்கு பயந்தாலும் இரண்டாவது அலை விளைவுகளை கண்டதும் பலர் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் லோக்கல்சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 7 சதவீதம் மக்கள் மட்டுமே பயப்படுவதாக தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கவலை, தடுப்பூசிக்கான அவசர ஒப்புதல், பக்க விளைவுகள் உள்ளிட்டவற்றை இவர்கள் காரணமாக சொல்லியுள்ளனர்.

இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 94 கோடி பேர் உள்ள நிலையில் 68 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.