1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (18:41 IST)

இப்படியும் ஒரு கலெக்டரா? - வீடியோ பாருங்கள்

தனது வாகன ஒட்டுநர் ஒய்வு பெற்றதையடுத்து அவரை காரில் அமர வைத்து கரூர் கலெக்டர் அன்பழகன் காரை ஓட்டிய செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 
கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், பொறுப்பேற்றதிலிருந்து எல்லா வகையிலும், மற்ற அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்யும் தவறுகளை அவர்களிடம் சுட்டிக்காட்டாமல், அவரே அந்த பணியினை செய்து அதன் மூலமாக எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி வந்தார். 
 
அதற்கு உதாரணம் தான், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதியோர் உதவித்தொகை பெற நீண்ட நாட்களாக இழுக்கடிப்பட்ட, ஒரு மூதாட்டியை கண்டறிந்து அவரது வீட்டில், கலெக்டர் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுகளை கலெக்டரும், அந்த வயதான மூதாட்டிக்க்கும் சாப்பாடுகள் பறிமாறப்பட்டு, இருவரும் உண்டு மகிழ்ந்ததோடு, யாராவது கேட்டால் என் மகன் கலெக்டர் அன்பழகன் என்று கூறுங்கள், உதவிக்காகவோ, கோரிக்கைக்காகவோ, என்று அந்த மூதாட்டிக்கு ஒரு புத்துணர்ச்சி தந்தவர் அன்பழகன். 
 
இந்த சம்பவத்தின் மூலம், அந்த பகுதியில் பல வருடங்கள் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் நாம் இந்த காரியம் செய்யாமல் இருந்ததை, சொல்லாமல் கரூர் கலெக்டர் அன்பழகன் செய்து காட்டி விட்டு, நமது தவறை சுட்டியும் காட்டி விட்டார் என்று பெருமூச்சு விட்டனர். 

 
இந்நிலையில், அவரது வாகன ஒட்டுநர் பரமசிவம் கடந்தம் மாதம் 30ம் தேதி பணி ஒய்வு பெற்றார். பல மாவட்ட ஆட்சியர்களுக்கு வாகனம் ஒட்டிய, அந்த கார் டிரைவர் பரமசிவம், கலெக்டர் அன்பழகன், பதவி வகிக்கும் போது, பணி ஒய்வு பெற்றதோடு, அவரை கெளரவிக்கும் விதத்தில், அவரின் குடும்பத்தை பின்னால் அமர வைத்து கலெக்டரே காரை ஓட்டி சென்று அவர்களை வீட்டில் சேர்த்தார்.
 
மேலும், சீட் பெல்ட் போடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், சீட் பெல்ட் அணிந்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கலெக்டர் அன்பழகனின் இந்த எளிய செயல் கரூர் மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்