செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:43 IST)

அக்டோபர் 28 ஆம் தேதி அடுத்த போராட்டம் – ஒபிசி மாணவர்களுக்காக களத்தில் இறங்கும் திருமா வளவன்!

அக்டோபர் 28 ஆம் தேதி அடுத்த போராட்டம் – ஒபிசி மாணவர்களுக்காக களத்தில் இறங்கும் திருமா வளவன்!
ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ உயர்படிப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அக்டோடோபர் 28 ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவீத  இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இட ஒதுக்கீடு வழங்க சொல்லி அக்டோபர் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதில் சமூக நீதியை வலியுறுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.