செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (16:14 IST)

கூவத்தூர் ரகசியங்களை வெளியிட தயார் - எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுக்கும் கருணாஸ்

நீதிமன்றம் கேட்டால் கூவத்தூரில் நடந்தவற்றை கூற தயார் என சிறையில் இருந்து வெளியே வந்த எம்.எல்.ஏ கருணாஸ் கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
முதல்வர் மற்றும் காவல் அதிகாரி குறித்து கருணாஸ் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்த, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
அவர் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் அவருக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. எனவே, இன்று காலை கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தினமும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று காலை நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “ என் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காட்டிய வேகத்தை மக்கள் பணியில் காட்ட வேண்டும். பொய்யான புகார்களில் என் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பது பற்றி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டாரல் அதுபற்றி கூற நான் தயாராக இருக்கிறேன்” எனக் கூறினார்.