புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (13:07 IST)

பெரியார் சிலையருகே ஹெச் ராஜா போஸ்டர் –பரபரப்பு

பெரியார் சிலையின் சுற்றுசுவரில் ஒட்டப்பட்ட் ஹெச் ராஜாவின் பிறந்தநாள் போஸ்டர்களை ஒட்டியவர்களைக் கொண்டே திராவிட இயக்கத்தினர் கிழிக்க சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜாவின் பிறந்தநாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருப்பூரில் அமைந்துள்ள பெரியார், அண்ணா சிலைகள் அமைந்துள்ள இடத்தில் அதன் சுற்றுசுவரில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட ஹெச் ராஜா பிறந்தநாள் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு கூடிய திராவிட இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த போஸ்டர்களை ஒட்டியவர்களைக் கொண்டே அதை கிழிக்க செய்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போஸ்டர் விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் யார் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்ற விவரம் இல்லாததால் மேல் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் பாஜக தரப்போ ‘இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இது யாரோ திட்டமிட்டு வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த சதிச் செயல்’ என்று தெரிவித்துள்ளது.