மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்துடனேயே திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட விவகாரம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1959ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு கருணாநிதியே காரணமாக இருந்தார். அந்த தேர்தலில் திமுகவிற்கு மேயர் பதவியே கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்த கருணாநிதிக்கு அண்ணா ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தார். அதை பொக்கிஷமாக கருதிய கருணாநிதி அந்த மோதிரத்தை...