கருணாநிதி மறைவு எதிரொலி: டி.என்.பி.எல். ஆட்டங்கள் ரத்து

Last Modified வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (08:45 IST)
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் காலமானதை அடுத்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நடைபெறவிருந்த இரண்டு டி.என்.பில்.போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது
நெல்லையில் நேற்று நடைபெற வேண்டிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் இடையே நடைபெறவிருந்தது. அதேபோல்
நத்தத்தில் கோவை கிங்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் இடையிலான வெளியேற்றுதல் சுற்று ஆட்டமும் நடைபெறவிருந்தது. இந்த இரு ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டதாக டி.என்.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட இந்த ஆட்டங்கள் நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு டி.என்.பி.எல் நிர்வாகம் சார்பில் அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :