புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (12:39 IST)

தனது மரணத்தையும் கொண்டாட வைத்த கலைஞர்.....

மறைந்த திமுக தலைவரின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பு திமுக தொண்டர்களுக்கு துக்க நேரத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

 
கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது.  
 
இதை எதிர்த்து திமுக தரப்பு தொடர்ந்த வழக்கில், தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது. 
 
இதைஅறிந்து ஆனந்த கண்ணீர் விட்ட மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தொண்டர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு உணர்ச்சி மிகுதியில் அழுதார். அவருக்கு அருகே நின்றிருந்த துரைமுருகன், கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிமுக அரசுக்கு எதிராக திமுக நடத்திய போராட்டம் 14 மணி நேரத்திற்கு பின் முடிவிற்கு வந்துள்ளது. 

 
இந்த தீர்ப்பை கேட்டு ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலுக்கு அருகில் கூடியிருந்த திமுகவினர் மகிழ்ச்சியால் உணர்ச்சி மிகுதியில் கூக்குரல் எழுப்பினர். மேலும், தலைவர் வாழ்க.. தலைவர் வாழ்க என அவர்கள் முழக்கமிட்டனர். அனைவரின் முகத்திலும் போராடி வெற்றிபெற்ற மகிழ்ச்சி தெரிந்தது.
 
இதைத்தொடர்ந்து சமூகவலைத்தளங்களில், 
 
மரண வீட்டில் மகிழ்ச்சியை கொடுத்தார் கலைஞர்...
 
போராடி பெரும்போதுதான் உரிமை அதீத சுவையாக ருசிக்கிறது..
 
கலைஞர் மரணத்தைக் கூட விழாவாக கொண்டா வைத்த ஐயா ஈபிஎஸ் க்கு கோடானு கோடி நன்றி...
 
கலைஞர் தான் போட்டியிட்ட எந்த பொதுத்தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் தோற்றதே இல்லை. கடைசியாக நடந்த "இட"த்தேர்தலிலும் வென்றிருக்கிறார்...
 
முத்தமிழ் அறிஞரின் இறுதிப் போராட்டமும் வெற்றி கண்டது.. 
 
உன்னால் மட்டுமே சாவுக்கான கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக்க முடியும். கண்ணீரின் உப்பில் வெற்றிச் சர்க்கரை..
 
என பலரும் உணர்ச்சி மிகுதியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.