வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (19:31 IST)

திமுகவின் நிரந்தர தலைவராக இருப்பாரா கருணாநிதி? ஸ்டாலின் ப்ளான் என்ன?

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த நிலையில், திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 14 ஆம் தேதி அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த பொதுக்கூட்டம் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குதான் என பல தரப்பில் இருந்து செய்திகள் தெரிவித்தாலும், இது குறித்து ஸ்டாலினிடம் கேட்ட போது திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தவே இந்த செயற்குழு கூடுகிறது. வேறு எந்த காரணமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். 
 
எனவே, தற்போதைய சூழ்நிலையில் திமுக செயல் தலைவராக உள்ள ஸ்டாலின் தலைவர் ஆவதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மேலும், அதிமுக வழியில் திமுக பயணம் செய்யும் என ஒரு கருத்தும் கூறப்படுகிறது. 
 
அதாவது, அதிமுகவில் தலைவர் பதவி கிடையாது. அண்ணாதான் நிரந்தர தலைவர் என்று கூறி தலைவர் பதவியையே உருவாக்கவில்லை எம்ஜிஆர். இதுபோல, கருணாநிதியின் தலைமை பதவிக்கு மதிப்பு கொடுத்து அவர்தான் திமுகவின் நிரந்தர தலைவர் என கூறி செயல் தலைவர் பதவியோடு ஸ்டாலின் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.