வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (07:39 IST)

காவேரி மருத்துவமனையில் இருந்து கிளம்பிய கருணாநிதியின் குடும்பத்தினர்

திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று நள்ளிரவு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மருத்துவர்களின் சில நிமிட தீவிர சிகிச்சைக்கு பின் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீரானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் கருணாநிதியுடன் மருத்துவமனைக்கு சென்ற அவரது குடும்பத்தினர்களாகிய மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்,  தயாநிதி மாறன், கனிமொழி, ஆகியோர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. இருப்பினும் கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
 
அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ. வ.வேலு, கே.என்.நேரு  ஆகியோர்களும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும் கருணாநிதி அவர்களின்  தனி மருத்துவர் கோபால் அவர்களும் காவேரி மருத்துவமனையில் இருந்து கிளம்பி விட்டார் என்பது தெரிய வந்துள்ளது.