1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (21:30 IST)

தொண்டர்கள் புடை சூழ கருணாநிதியின் உடல் கோபாலபுரத்திற்கு செல்கிறது

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தொண்டர்கள் புடை சூழ  கோபாலபுரத்திற்கு செல்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை மறைந்தார் என்ற செய்தியை கேட்டு கோடிக்கணக்கான திமுக தொண்டர்கள் மீளாத்துயரில் உள்ளனர். தங்கள் தலைவரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க சென்னையில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
 
கருணாநிதிக்கு குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும், சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரையும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கருணாநிதியின் உடல் நாளை அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் கோபாலபுர இல்லத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. தொண்டர்கள் சூழ கருணாநிதியின் பூத உடல் கோபாலபுரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.