மெரினாவில் இடம் தர கோரி திமுக உயர்நீதிமன்றத்தில் மனு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்க செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதைத்தொடர்ந்து இவரது உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்க செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில் திமுகவினர் தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் வீட்டிற்கு சென்று கருணாநிதி உடலை மெரினாவில் அடக்க செய்ய கோரி மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி இரவு 10.30 மணிக்கு விசாரணை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.