திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (15:51 IST)

கார்த்திக் சிதம்பரம் பேசியபோது பாரத் மாதா கீ ஜெய்’ கோஷம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ்..!

ரயில்வே நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பேசியபோது திடீரென அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பாரத் மாதா கீ ஜெய்’ என கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்தியா முழுவதும் 554 ரயில் நிலையங்களை மறு சீரமைக்கும் பணிகளை காணொளி காட்சி மூலம் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில் அம்ரித் பாரத் திட்ட நிகழ்ச்சியில் கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டார் 
 
அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ரயில்வே நிர்வாகத்தை குறை கூறினார். குறிப்பாக தமிழகத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சப்பாத்தி தான் ரயிலில் உணவு வழங்கப்படுகிறது என்றும் இங்குள்ள உணவுகள் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்த நிலையில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பாஜகவினர் புகுந்து பாரத் மாதா கீ ஜெய்’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் ரயில்வே துறை மீது கார்த்திக் சிதம்பரம் திட்டமிட்டு பொய்ப்புகார் கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் இந்த நிகழ்ச்சியின் போது பரபரப்பு ஏற்பட்டது
 
 
Edited by Siva