வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (14:02 IST)

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு!

Anand Srinivasan
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்திய பொருளாதாரம் பற்றியும், தங்கம் உள்ளிட்ட முதலீடுகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் போன்ற பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.
 
இவர் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில ஊடகம் மற்றும் செய்தித் தொடர்புத் துறையின் தலைவராக ஆனந்த் சீனிவாசனை நியமித்து அக்கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 
புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.