1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (12:24 IST)

“தண்ணீரும் கிடையாது, ஒன்றும் கிடையாது” கைவிரித்த கர்நாடகம்

தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு வழங்கியும் அதை மதிக்காமல் மீண்டும் பிரச்சினையில் ஈடுபடுகிறது கர்நாடகா.

கர்நாடக அரசியல் தலைவர்கள் பலர் இந்த உத்தரவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நேற்று தண்ணீர் திறந்துவிட கூடாது என வலியுறுத்தி கர்நாடக கரும்பு விவாசாயிகள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் “கர்நாடகாவில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியடைந்த தமிழக விவசாயிகள் இப்போது தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலையில் உள்ளனர்.